திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்த கார்த்திகேயன் திருச்சி மாவட்ட ஆவின் தலைவராகவும் செயல்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்தனர்.
இதனால் கடுப்பான முதல்வர் எடப்பாடி திருச்சி கார்த்திகேயனிடம் இருந்த ஆவின் தலைவர் பதவி அதிரடியாக பறித்து விட்டாராம். நிஜமாகவே புகார் வரும் நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போலவே எடப்பாடியாரும் சாட்டையை சுழற்ற ஆரம்பித்துவிட்டாராம். இதனால் ஆளுங்கட்சி வட்டாரத்தில் முக்கிய தலைகள் கூட கலக்கத்தில் உள்ளார்களாம்.