சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தின் சாவி ஜெ.தீபா, தீபக்கிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா மற்றும் தீபக்கிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.
ஐகோர்ட் உத்தரவுப்படி ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக்கிடம் ஆட்சியர் விஜயராணி சாவியை தந்தார்..ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பளித்திருந்தது.