ஜெர்மனியில் மக்கள் கூடியிருந்த கூட்டத்திற்குள் திடீரென்று கார் ஒன்று அந்தக் கூட்டத்தில் புகுந்ததால் விபத்து ஏற்பட்டது.
ஜெர்மனியில் leipzig என்ற நகரில் இந்த விபத்து நடந்தது. இந்நகரில் prager என்ற தெருவில் போக்குவரத்து நிறுத்தத்திற்கு அருகில் , மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். வழக்கமாக இந்த தெருவில் மக்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இந்நிலையில் விபத்து நேர்ந்த நாளன்று கூட்ட நெரிசல் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இவ்வாறு மக்கள் கூட்டமாக இருந்த நேரத்தில் அந்த வழியே வந்த கார் ஒன்று ,திடீரென்று மக்கள் கூடியிருந்த கூட்டத்திற்கும் வேகமாக புகுந்துள்ளது.
50 வயது மிக்க நபர் ஒருவர் அந்தக் காரை வேகமாக ஓட்டிச்சென்று, கூட்டத்திற்குள் புகுந்து விட்டார். இதனால் மக்கள் கூட்டத்தில் 2 பேர் மீது வேகமாக மோதியதில் , அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் சிலர் படுகாயம் அடைந்ததால் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து பற்றி தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து ,விபத்து பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்றும் , கார் எதற்காக மக்கள் கூட்டத்திற்கு புகுந்தது, என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.