Categories
உலக செய்திகள்

ஜெர்மனில் முககவசம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் லஞ்சம் … எம்.பியின் வீட்டில் சோதனை ..!!

ஜெர்மன் நாட்டில் முக கவசத்திற்க்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று  காரணமாக அனைத்து நாடுகளிலும் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருகின்றனர். ஜெர்மனில் முகக்கவசம் வாங்க போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்சர்வடிவ் எம்.பி ஜார்ஜ் நுஸ்ளெய்ன் முகக்கவசம் சப்ளையர்க்கு ஒப்பந்தத்தை வழங்க 6,60,000 யூரோ பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்ளூர் ஊடகம் செய்தி ஒன்றில்  லஞ்சப்பணம் பெற்ற ஜார்ஜ் நுஸ்ளெய்ன் நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு அப்பணத்தை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அந்த லஞ்சப்பணம் வருமான வரியில் கணக்கில் காட்டப்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

கடந்த 2002 முதல் ஜார்ஜ் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 2014 முதல் நாடாளுமன்றக் குழுவின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார் . வியாழக்கிழமை அன்று ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஜெர்மனி மற்றும் லிச்ட்டேன்ஸ்டீனில் ஜார்ஜ் நுஸ்ளெய்ன்க்கு சொந்தமான 13 இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர் .வியாழக்கிழமை அன்று ஜெர்மனி நாடாளுமன்றத்தில் கீழ் சபையான பேன்ஸ்டாக் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவருக்கு இம்முனிட்டியை  நீக்க ஒருமனதாக வாக்களித்துள்ளது .அனால் பேன்ஸ்டாக் குழு உறுப்பினர் தற்போது ஜார்ஜ் நுஸ்ளெய்ன் வழக்கில் கடமையை செய்யலாம் என்று கூறியுள்ளனர் .

Categories

Tech |