ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் ஈஸ்டர் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன் தேசிய பணி நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.
ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஈஸ்டர் பண்டிகைக்கு ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதி வர கடுமையான பணி நிறுத்தத்தை அறிவிதுள்ளார். மெர்க்கல் மற்றும் ஜெர்மனியின் 16 மாநில தலைவர்கள் இந்த 5 நாள் கடுமையான பனி நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 5 நாட்களில் அனைத்து கடைகளும் மூடப்படும். ஏப்ரல் 3 சனிக்கிழமை அன்று மளிகை கடைகள் மட்டும் திறந்து இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மெர்கல் கூறியதில் ஜெர்மனி தற்போது பிரிட்டனில் உருமாறிய கொரோனா தொற்றால் அதிகமாக பாதிப்படைந்துள்ளதாக கூறியுள்ளார் .மேலும் ஈஸ்டர் பண்டிகைக்காக மத சேவைகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.