Categories
மாநில செய்திகள்

ஜெருசலேம் புனித பயணத்துக்கான நிதியுதவி உயர்வு…. வெளியிடப்பட்ட அரசாணை…..!!

தமிழகத்திலுள்ள ஜெருலேசம் புனித பயணத்திற்கு செல்லும் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் வரும் மானியத்தை ரூ.37,000 லிருந்து ரூ.60,000 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான அரசாணையை சிறுபான்மை துறை அரசு முதன்மை செயலாளர் ஆர்.கார்த்திக் வெளியிட்டுள்ளார். அதில், ஜெருலேசம் புனித பயணத்திற்கு செல்லும் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் ஆகியோர்களுக்கு மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

அதனை செயல்படுத்துவதற்காக தேவையான கூடுதல் நீதி ரூ.11.5 இலட்சத்தை 2021-2022 நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டில் உரிய கணக்கு தலைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஆய்வுசெய்து ஜெருசலேம் சென்று வர நிதி உதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவி ரூ ரூ.60,000  ஆக உயர்த்தி வழங்க நிர்வாகம் ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |