நடிகர் ஜெய் மற்றும் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ள ட்ரிபிள்ஸ் வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது .
சின்னத்திரை நாடகத்தில் அறிமுகமாகிய நடிகை வாணிபோஜன் ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார். இதையடுத்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் . தற்போது இவர் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகும் ‘ட்ரிபிள்ஸ்’ என்ற வெப்சீரிஸ் தொடரில் நடித்துள்ளார்.
நடிகர் ஜெய் மற்றும் நடிகை வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இந்த தொடரை சாருகேஷ் சேகர் இயக்குகிறார். மூன்று நண்பர்களுக்கு இடையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக ட்ரெய்லரில் தெரிகிறது. மேலும் இந்த தொடர் டிசம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது .