பிரபல இசையமைப்பாளரின் புதிய பாடல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் ஷான் ரோல்டன். இவர் இசையமைப்பாளர், பாடகர் என தனக்குள் பன்முக திறமைகளை கொண்டவர். மேலும் இவர் வேலையில்லா பட்டதாரி 2, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகி மனதில் இடம் பிடித்தார்.
இந்த நிலையில் புதிய பாடல் ஒன்றை கம்போஸ் செய்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் பாடலானது ஒரு நிமிடம் உள்ளடக்கியதாகவும் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாக்கி இருப்பதாகவும் அமைந்திருக்கின்றது. இது தற்பொழுது மக்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது.
https://www.instagram.com/reel/Ch2CsZEJVOB/?utm_source=ig_embed&ig_rid=522512f1-50b2-4b2e-8c67-e9a372dc3759