சீனாவில் தற்போது ’12-வது பெய்ஜிங் சர்வதேச திரைப்படவிழா’ நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழ் படமான ‘ஜெய் பீம்’ திரையிடப்பட்டது. அந்த நாட்டு மொழியில் திரையிடப்பட்ட இப்படத்தை சீன திரை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர். சீன திரை ரசிகர்கள் இப்படத்தை காணும்போதே தேம்பி அழுதனர்.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த சீனர்கள் இப்படத்தில் தங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் ‘சத்துரு, செங்கேணி’ என்று தெரிவித்தனர். அதோடு இப்படத்தின் கதை மன வலியை ஏற்படுத்துவதாகவும், சமூகத்தில் நடக்கும் இன்னல்களை எடுத்துரைப்பதாகவும், கண்ணீருடன் பார்த்து மனம் நெகிழ்ந்து போனதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.