ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள குற்றமே குற்றம் திரைப்படம் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.
வீரபாண்டியபுரம் திரைப்படமானது சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் அண்மையில் வெளியாகி தோல்வியை தழுவியதால் அடுத்த திரைப்படத்தில் கண்டிப்பாக வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார் ஜெய். இவர் தற்போது எண்ணித் துணிக, பிரேக்கிங் நியூஸ், மேலும் பெயரிடப்படாத திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். வீரபாண்டியபுரம் படத்தில் இணைந்த இயக்குனருடன் மீண்டும் குற்றமே குற்றம் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஜெய்.
இத்திரைப்படத்தில் திவ்யா துரைசாமி ஹீரோயினாக நடிக்க பாரதிராஜா, ஸ்மிருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படமானது தற்போது திரையரங்கில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படமானது கலைஞர் தொலைக்காட்சியில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு அன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.