Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் போஸ்டர்”….. நெல்சனை பாராட்டும் ரஜினி ரசிகாஸ்…!!!!!

ஜெயிலர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரஜினி ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் ஒரு சில படங்களை மட்டுமே இயக்கி பிரபல இயக்குனராக வலம் வருகின்றார் நெல்சன் தீலீப்குமார். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. நெல்சன் தற்போது ரஜினியின் தலைவர் 169-வது திரைப்படத்தை இயக்குகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கின்றார். இதனால் ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பினை அதிகரிக்க செய்திருக்கின்றது.

இத்திரைப்படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியாகி உள்ளது. இதை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் ரஜினிகாந்த் வயதான தோற்றத்தில் கண்ணாடி அணிந்தபடி இருக்கின்றார்.

இந்த பர்ஸ்ட் லுக் மூலம் நெல்சன் கலக்கிட்டாரு. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பந்தா இல்லாமல் அமைதியாக இருக்கின்றார் ரஜினி. ஆனால் அது கூட கெத்தாக தான் இருக்கின்றது. ஜெயிலரில் ரஜினி தெறிக்க விட போகின்றார் என்பது மட்டும் தெரிகின்றது. ஜெயிலர் போஸ்டரை பார்க்கும்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த பேட்ட திரைப்படத்தில் வந்த ஸ்டைலான ரஜினி கண் முன்பு வந்து போகின்றார். இருக்கு சிறப்பான, தரமான சம்பவம் இருக்கு. இப்போதான் நெல்சன் மீது நம்பிக்கை வந்திருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |