Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. நான் அதில் தலையிடவே இல்லை…. சசிகலா பரபரப்பு அறிக்கை….!!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்த நிலையில் தற்போது சசிகலா உள்ளிட்ட எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஜெயலலிதாவின் மரண விவகாரத்தில் சசிகலா, கே எஸ் சிவக்குமார், ராதாகிருஷ்ணன், விஜயபாஸ்கர், ஒய் வி சி ரெட்டி, பிரதாப் ரெட்டி டாக்டர் பாபு ஆபிரகாம் மற்றும் ராமமோகன் ராவ் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.அதன்படி இந்த எட்டு பேர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை செயலாளருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தொடர்பாக ஜெயலலிதா புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு முதல் தர சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை எனது நோக்கமாக இருந்தது. அவரது சிகிச்சையில் நான் தலையிடவே இல்லை.அவரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல நான் தடையாக இருக்கவில்லை.எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ தேவையில்லை என முடிவெடுத்தனர் என சசிகலா தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாம் என குறிப்பிட்டு இருந்த நிலையில் அதற்கு தடையாக இருந்தது யார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் தற்போது சசிகலா இந்த பரபரப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |