Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம்…. இதில் மறைக்க எதுவும் இல்லை…. சசிகலா பேட்டி….!!!!

சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஒரு பகுதியில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்  கூறியதாவது,”நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பல ஆண்டுகள் மக்களின் நலனுக்காக பணிபுரிந்தேன். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து பார்த்து சென்றனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் பணிபுரிய மருத்துவர்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும் உங்கள் எல்லாத்துக்கும் தெரியும்.

இந்நிலையில் எய்ம்ஸ்  மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் தினமும் வந்து ஜெயலலிதாவை பரிசோதனை செய்து அறிக்கை கொடுத்தார்கள். அவர்கள் அளித்த சிகிச்சையில்  மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை. இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க எனக்கு விருப்பம் தான். ஆனால் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதை  ஜெயலலிதா ஏற்கவில்லை. இந்நிலையில் சென்னை மருத்துவமனை துறையின் தலைநகரம் அப்படி இருக்க வெளிநாடு செல்ல அவர் விரும்பவில்லை. மருத்துவர்களை இங்கே வரவழைத்து சிகிச்சை பெறவே  விரும்பினார்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |