புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஏழை குடும்ப தலைவிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் திட்டம் வகுத்து மாதம் ரூபாய் 1500 வழங்க வேண்டும் என்று அம்மாநில திமுக தலைவர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், புதுச்சேரியில் 1,60,000 குடும்பத்தினர்களுக்கு எந்தவித மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவது கிடையாது. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் உள்ள சுமார் ஒரு லட்சம் குடும்பத்தினரை இனம் கண்டு அவர்களுடைய குடும்பத்திற்கு மாதம் 1,500 ரூபாயை அரசு வழங்க அரசு முன்வர வேண்டும்.
மேலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பெயரில் இந்த திட்டம் தொடங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு கிட்டத்தட்ட மாதம் பதினைந்து கோடி அளவில் ஆண்டுக்கு 150 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகும். இந்த திட்டத்தை இந்தியாவிற்கே முன் மாதிரியாக தாங்கள் நடைபெற இருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் முதலமைச்சர் ரங்கசாமி இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இந்த திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.