நடிகர் ஜெயம்ரவி நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம்ரவி. இவர் நடித்த பொன்னியின் செல்வன் படத்தில் இவரின் புகைப்படம் அண்மையில் வெளியானது. அதில் அருள்மொழிவர்மன் ஆக நடித்த ஜெயம் ரவியின் புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. ஜெயம் ரவி நடித்த மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் ஜெயம்ரவி அடுத்து நடிக்கும் திரைப்படம் குறித்து தகவல் வெளிவந்துள்ளன. இவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட காமெடி திரைப்படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். மேலும் இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கின்றது. கூடிய விரைவில் படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.