நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அரசின் முழு முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு வந்தது. இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. தற்போது டெல்லியில் அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பாக தினசரி 100-ஒக்கு கீழ் பதிவாகி வந்த நிலையில், அது தற்போது 300 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக டெல்லியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1103 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவல் விகிதம் 0.55 அதிகரித்த நிலையில் ஏற்கனவே கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, பொது இடங்களில் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் தடை விதித்துள்ளது.
மேலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதால், இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இரவு 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹோட்டல்கள் 50% இருக்கைகளுடன் செயல்படவும், பொது இடங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கக் கூடிய நிலையில் தலைநகர் டெல்லியில் வருகிற 10-ஆம் தேதி அன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார். முதல் மற்றும் 2-ம் அலையில் கடும் ஒமைக்ரான் மற்றும் கொரோனா பாதிப்பை சந்தித்த டெல்லி, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.