Categories
தேசிய செய்திகள்

ஜூலை 9 வரை ஊரடங்கு நீட்டிப்பு…. மாநில அரசுஅறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் ஜூலை 9 வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக தலைமைச் செயலாளர் குமார் அலோக் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி ஜூலை 9ஆம் தேதி வரை அன்றாடம் மதியம் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். தலைநகர் அகர்தலா, ராணிர்பஜார், உதய்பூர், கைலாஷாஹர், தாராநகர், கோவாஇ, பெலோனியா ஆகிய 9 நகரங்களில் இந்த ஊரடங்கு அமல்படுத்துப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 6 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நிலவும்.

ஊரடங்கு காலத்தில் வாகனங்கள் அதிகாலை 5 மணி முதல் 2 மணி வரையில்தான் இயக்கப்படலாம். இருப்பினும், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்குத் தடையில்லை. ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதியில்லை. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை இயங்கலாம். மதம், சமூகம், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதியில்லை. உணவகங்கள் மதியம் 2 மணி வரை இயங்கலாம்.

Categories

Tech |