உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பல்வேறு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஒரு சில நாடுகளில் விமான சேவைகள் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது. ஆனால் ஒருசில நாடுகளில் தடை இன்னும் நீடிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு தனது நாட்டு மக்கள் செல்ல ஜூலை 21 வரை ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.