Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஜூலை 17 முதல் சபரிமலை பக்தர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட வருகிறார்கள்.

இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என பக்தர்களுக்கு சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் வருகின்ற 17 ம் தேதி முதல் 21ஆம் தேதி வரை திறக்கப்பட உள்ளது. அதேநேரம் கோவிலில் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ், கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழ் உடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |