ஜூலை 15ஆம் தேதி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் முழுவதும் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது .ஆனால் இந்த ஆண்டு பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டிற்கு கடந்து ஜூன் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றன . பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்களுக்கு விலையில்லா இலவச புத்தகம் வழங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் இலவச பாட புத்தகம் விநியோகம் தொடர்பாக வரும் 15-ம் தேதி சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்த உள்ளார். புத்தகங்கள் சரிவர வழங்கப்படவில்லை என்ற புகார்கள் தொடர்பாக இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்ற.து மேலும் இலவச புத்தகம் விநியோகத்துடன் நர்சரி, பிரைமரி பள்ளிகள் அங்கீகாரம் பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.