இலங்கையில் கடந்த சில நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இலங்கையில் ஜூலை 10ஆம் தேதி வரை நகர்ப்புற பள்ளிகள், அத்தியாவசியம் இல்லாத சேவைகள் இயங்காது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஜூலை 10 ஆம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும். தனியார்துறை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
Categories
ஜூலை 10 ஆம் தேதி வரை பள்ளிகள் இயங்காது…. அரசு திடீர் அவசர அறிவிப்பு….!!!!
