Categories
ஆட்டோ மொபைல்

ஜூலை 1 முதல் அமல்…. இருசக்கர வாகனங்களின் விலை உயர்வு…. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்கள் விலை 3,000 ரூபாய் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. கமாடிட்டி விலை உயர்வு,பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களில் மாடலுக்கு தகுந்தாற்போல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகனம் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம்,உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வாகனங்கள் விலை 3,000 ரூபாய் வரை உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது . ஆனால் எந்தெந்த மாடல் மோட்டார் சைக்கிளுக்கும்,ஸ்கூட்டர் களுக்கும் எவ்வளவு விலை உயர்வு என்பது குறித்து தெரிவிக்க வில்லை.

Categories

Tech |