Categories
தேசிய செய்திகள்

ஜூலை 1ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள் 20% பணியாளர்களுடன் இயங்கலாம். மால்கள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை 50% பணியாளர்களுடன் இயங்கலாம். ஏற்கனவே உள்ள தளர்வுகள் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |