நாடு முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதியை மாநில அரசுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. மகாராஷ்டிராவில் ஜூன் 15ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. ஆனால் விதர்பாவில் ஜூன் 29 தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனால் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் பள்ளி ஆசிரியர்கள் வருகை புரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. ஆனால் பள்ளிகளில் குழந்தைகள் விதிகளைப் பின்பற்றுகிறார்களா இல்லை என்பதை கண்காணிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனால் ஆசிரியர் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு மாணவர்களை வரவேற்கத் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.