நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இருந்தாலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பல மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் ஜூன் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் தளர்வு அளிக்கப்படுகிறது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு இப்போதைய கட்டுப்பாடுகள் தொடரும். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்படலாம் என்று அவர் கூறியுள்ளார். இதனைப் போலவே தமிழகத்திலும் ஊரடங்கு நீட்டிப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.