இந்தியா முழுவதிலும் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூன் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அதனைப் போலவே ஆந்திராவில் ஜூன் 10ஆம் தேதி வரையும், பீகாரில் ஜூன் எட்டாம் தேதி வரையும், லட்சத்தீவில் ஜூன் 7ஆம் தேதி வரையும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.