Categories
மாநில செய்திகள்

ஜூன் 13ஆம் தேதி இங்கெல்லாம் ரேஷன் கடை இயங்காது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை,செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர 30 மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளில் கிட்டத்தட்ட 25 ஆயிரம் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 13ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால் இந்த மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் போராட்டம் காரணமாக செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதற்கு முன்னரே ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்வது நல்லது.

Categories

Tech |