நடிகர் ஆனந்த் செல்வன் நினைத்தாலே இனிக்கும் என்ற புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி, நீதானே என் பொன்வசந்தம் போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் யாரடி நீ மோஹினி சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் யாரடி நீ மோஹினி சீரியலை தயாரித்த monk ஸ்டூடியோஸ் புதிதாக தயாரிக்கும் சீரியல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நினைத்தாலே இனிக்கும் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் நடிகர் ஆனந்த் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார் . இதனை அவரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் ஆனந்த் செல்வன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான உயிரே சீரியலில் நடித்திருந்தார்.