Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஜீரோ” வந்து இருக்கணும்…! இப்படி அவசரப்பட்டுடீங்களே.. ? எல்லாமே முடிஞ்ச பிறகு வேதனைப்பட்ட கிருஷ்ணசாமி …!!

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, 2020ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து இந்தியாவையே அதிரவைத்த பாதிப்பிற்கு ஆளாக்கிய கொரோனா, மெல்ல மெல்ல குறைந்து 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உயிரிழப்புகளும் குறைவாக இருந்தது. அதைப்போல பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கையும் தமிழ்நாடு எங்கும் மிகப்பெரிய அளவுக்கு குறைந்து வந்தது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் இறுதியில், அறிவிக்கப்பட்ட தேர்தல் அறிவிப்புகள், அதைத் தொடர்ந்து தமிழகத்தில் அரசியல் கட்சிகள் நடத்திய கூட்டங்களினால் மீண்டும் தமிழகத்தில்  கொரோனா  பாதிப்புகளை அதிகரிக்கச் செய்திருக்கிறது.  நேற்றைய தினம் ( 10ஆம் தேதி ) மட்டும் 23 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தினமும் தமிழ்நாடு எங்கும் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

2020ஆம் ஆண்டு முழு அடைப்புக்கு பிறகு, தமிழகத்தின் உடைய பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களுடைய வீடுகளுக்கு திரும்பி,  மீண்டும் ஜனவரி மாதத்தில் தான் தமிழகம் திரும்பினார். இப்பொழுது மீண்டும் கொரோனா  பீதி  உருவான காரணத்தால், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில், மிகப்பெரிய ஒரு அச்சம் நிலவுகிறது.

தமிழ்நாடு அரசும் கடந்த பத்தாம் தேதியில் இருந்து  சில நடவடிக்கைகளை எடுப்பதற்கு அறிவித்து இருக்கிறது. அதாவது கொரோனாவுடைய பாதிப்பு பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்க கூடியது. ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கியது. பல்லாயிரக்கணக்கான மக்களை நோய்வாய் பட வைத்து வீட்டிலேயே முடக்கி வைத்த அந்த நோய், கட்டுப்பாட்டுக்குள் வந்த பொழுது தமிழகத்தில் ஜீரோ நிலை எய்திய பிறகு, அல்லது சிறிது காலம் கழித்து தமிழகத்தில் தேர்தல் நடத்தி இருக்கலாம். ஆனால் அவசரப்பட்டு தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்து விட்டது என தெரிவித்தார்.

Categories

Tech |