Categories
Tech டெக்னாலஜி

ஜியோ 5G வெல்கம் ஆஃபர்…. பதிவு செய்வது எப்படி?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

5G இணைப்புள்ள நகரங்களில் JIO 5G-ஐ இலவசமாக பயன்படுத்தலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜியோ நிறுவனம் இச்சலுகையை அறிவித்து உள்ளது. இச்சலுகையின் கீழ் JIO பயனாளர்கள் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிட்டெட் 5G டேட்டாவை பெற முடியும். ஜியோ 5G முன்பே உள்ள பகுதிகளில் வசிக்கக்கூடிய அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த சலுகையைப் பெற இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆஃபர் மற்றும் சலுகையினை பெற வாடிக்கையாளர்கள் ஒருசில தகுதிகளை பூர்த்தி செய்யவும்.

JIO-வின் 5G நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்கான அழைப்பை பெறுவதற்கு, வாடிக்கையாளர்கள் தங்களது எண்ணை நிறுவனத்தில் பதிவுசெய்ய வேண்டும். எண்ணைப் பதிவு செய்த பின், அந்த குறிப்பிட்ட பயனாளர் Jio True 5G-ஐப் பயன்படுத்தத் தகுதி உள்ளவரா என்பதை ஜியோ முடிவு செய்யும். பயனாளர்கள் JIO 5Gக்கு ஏற்ற சாதனத்தினை வைத்திருக்கவேண்டும். நெட்வொர்க் கவரேஜ் கிடைக்கும் பகுதியில் தங்கி இருக்க வேண்டும் எனவும் கூறுகிறது. அத்துடன் ஜியோ பயனர்கள் நிறுவனத்திடமிருந்து அழைப்பைப் பெற ப்ரீபெய்ட் மற்றும் அனைத்து போஸ்ட்பெய்ட் பயனாளர்களுக்கும் ரூ.239 (அ) அதற்கும் மேற்பட்ட திட்டத்தை வைத்திருக்கவேண்டும்.

ஜியோ 5G வெல்கம் ஆஃபருக்கு பதிவுசெய்வது எவ்வாறு..?

# உங்களது டெஸ்க்டாப்பில் ஜியோவின் அதிகாரப்பூர்வமான இணையதளம் (அ) ஸ்மார்ட்போனில் My Jio ஆப்ஸைத் திறக்க வேண்டும்

# ஜியோ வெல்கம் ஆஃபர் தாவலுக்கு சென்று, “எக்ஸ்பிரஸ் இன்ரஸ்ட்”  என்று இருக்கும் விருப்பத்தைக் கிளிக் செய்யவேண்டும்

# அதை கிளிக் செய்த பின், உங்கள் தொலைபேசி எண்ணைப் பதிவுசெய்ய வேண்டிய புது பக்கம் திறக்கும்.

# அவற்றில் உங்களது JIO எண்ணை உள்ளிட்டதை அடுத்து, அதே எண்ணில் OTP-ஐ பெறுவீர்கள்

# பதிவுசெயல்முறையை துவங்க OTP வாயிலாக சரிபார்க்க வேண்டும்.

# ஜியோ உங்களது தகுதியை தீர்மானித்ததும், அது உங்களது மை ஜியோ பயன்பாட்டில் ஜியோ வெல்கம் ஆஃபருக்கான அழைப்பை அனுப்பும்.

Categories

Tech |