Categories
மாநில செய்திகள்

“ஜிம்மில் ஜம்முனு உடற்பயிற்சி” வேற யாருமில்ல நம்ம முதல்வர் தான்…. வைரல் வீடியோ…!!!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு உடற்பயிற்சி செய்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. பரபரப்பான அரசியல் சூழலில் கூட அவர் வாரத்தில் ஒரு நாள் உடற்பயிற்சி செய்வதையும் சைக்கிளிங்க்  செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

தேர்தல் பிரச்சாரங்களில் கூட சில கிராமங்களுக்கு நடந்தே சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்தார் .இந்நிலையில் இவர் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள்  இப்படி உடற்பயிற்சி செய்வதால் தான் எவ்வளவு வயதானாலும் முதல்வர் இளமையாக இருப்பது போல காட்சி அளிப்பதாக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Categories

Tech |