மதுரையில் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி செய்த ஸ்ரீ விஷ்ணு என்ற 27 வயதான இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
மதுரை பழங்காநத்தம் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ்வரன் என்பவரின் மகன் ஸ்ரீ விஷ்ணு. இவர் ஐடியில் வேலை பார்த்து வருகிறார். தினமும் மாடக்குளம் பிட்னஸ் சென்டரில் உடற்பயிற்சி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதிக எடை கொண்டு பளு தூக்கும் போது திடீரென மயங்கி விழுந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .