ஜிம்பர் மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஜிம்பர் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்து அறிக்கை ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் தற்போது காலியாக உள்ள 4 33 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பவர்கள் பி.எஸ்சி நர்சிங் மற்றும் டிஜிஎல்எம் முடித்து நர்சிங் கவுன்சிலின் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணி புரிந்திருக்க வேண்டும்.
இவர்கள் வருகின்ற 1.12.2022 அன்று முதல் https:// WWW.jipmer. edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்நிலையில் கட்டனமாக அனைத்து பிரிவினரும் 1,500 ரூபாய் செலுத்த வேண்டும். இதனையடுத்து மாற்றித் திறனாளிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. மேலும் 18.12.2022 அன்று நடைபெறும் எழுத்து தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் தேர்வில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள். தேர்வு ஒன்றரை மணி நேரம் நடைபெறும். கேள்வித்தாளில் பொது அறிவு, பொது நுண்ணறிவு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவிலிருந்து 30 கேள்விகளும், செவிலியர் பாடப்பிரிவிலிருந்து 70 கேள்விகளும் இடம் பெற்றிருக்கும். எனவே விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.