Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்வோர் கவனத்திற்கு…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கவரி துறை வாரியம் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட வரி செலுத்துவோருக்கு மாதாந்திர ஜிஎஸ்டி வரி ரிட்டன்  செலுத்துவதற்கு அக்டோபர் 20 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது இணையதளத்தில் சிறிய கோளாறு ஏற்பட்டதாக தற்போது பல்வேறு தரப்பிலிருந்து புகார் எழுந்துள்ளது.

அதோடு ஒரு நாள் கூடுதலா கால அவகாசம் தரவேண்டும் என வரி செலுத்துவோர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தற்போது அக்டோபர் 21-ஆம் தேதி வரை வரி செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 21 ஆம் தேதிக்குள் செப்டம்பர் மாத ஜிஎஸ்டி ரிட்டன் வரியை கட்டாயம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Categories

Tech |