Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டி இழப்பீடு…. மத்திய அரசுக்கு தமிழக பட்ஜெட்டில் பிடிஆர் கோரிக்கை…!!!!

நாடுமுழுவதும்  2017 ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி இந்த ஜிஎஸ்டிஅமல்படுத்தபட்டது. இந்த ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்தால் பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தொடக்கத்தில் அனைத்து மாநிலம் அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால் இதற்காக மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கான இழப்பீடுகள் அனைத்தும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதனால் மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் மத்திய அரசு அந்த இழப்பீடு தொகையை மாநில அரசுக்கு  இதுவரை முறையாக வழங்கவில்லை.

இந்நிலையில், ஜிஎஸ்டி கால வரம்பு வருகின்ற  ஜூன் மாதத்தோடு முடிவடைகிறது. அதன் பிறகு மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படுவதால் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் முறையை இன்னும் 2 வருடங்களுக்கு நீட்டிக்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 2022-23 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் கடந்த வாரம் நடந்தது.

அந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய நிதி அமைச்சர்  பி டி ர் பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி இழப்பீட்டு காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி. வந்த பின் தமிழ்நாட்டின் நிதியை சரி செய்வது கடினமாக இருக்கிறது. எங்கள் கையில் விளங்கு போட்டது போல் கஷ்டப்பட்டு வருகிறோம். அங்கிருந்து வரும் பணம் நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியே கொடுக்கப்படும் நிதியும் அவர்களின் திட்டங்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்  என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |