Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி”…. விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்தது.

அப்போது மாநிலத் தேர்தல் ஆணையம், விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது. தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருந்தால்தான் ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையிலேயே சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது. சுயேட்சை வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆட்டோ சின்னம் கேட்குமாறு கூறி இருந்தார். இந்நிலையில் மதுரை 88-வது மாநகராட்சி வார்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

 

Categories

Tech |