இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் டிச..25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களும், மற்றவர்களும் பரிசுகளை பரிமாறிக்கொள்வதன் வாயிலாக அதை நினைவு கூறுகின்றனர். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது அமைதி மற்றும் செழிப்புக்கான செய்தியை பரப்புவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26ஆம் தேதி அரசு விடுமுறை என மேற்கு வங்காள அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதன்படி மாநில அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பிற அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் வரும் டிசம்பர் 26-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.