டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையை இன்று முதல் பொதுமக்கள் சுற்றி பார்க்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை மற்றும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை தலா ஒரு மணி நேரம் மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என வாரத்தில் ஐந்து நாட்கள் அனுமதி உண்டு.
இதற்கு இணையதளத்தில் முன்பதிவு செய்து நேரம் ஒதுக்கீடு பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல குடியரசுத் தலைவர் மாளிகையின் அருங்காட்சியக வளாகத்தையும் பாரம் ஆறு நாட்கள் பார்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.