இயக்குநர் மாரிமுத்து அஜித் மற்றும் விஜய் பற்றி பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குநர் மாரிமுத்து 2008-ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும் 2014-ஆம் ஆண்டு விமல், பிரசன்னா, ஓவியா, சூரி ஆகியோர் நடிப்பில் வெளியான புலிவால் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் மாரிமுத்து நேர்க்காணல் அளித்துள்ளார். மேலும் விஜய் மற்றும் அஜித் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும் கூறியுள்ளார்.
அவர் ஆசை படத்தில்தான் முதலில் அஜித் சாருடன் இணைந்து பணியாற்றினேன். அப்போதுதான் வசந்த் சாருடன் சேர்ந்தேன். வசந்த் சாரிடம் படத்தின் ஹீரோ யார் என்று கேட்டபோது. அமராவதின்னு ஒரு படம் பண்ணியிருக்கான், பையன் அழகா இருக்கான் என்றார். அப்போது வான்மதி ஷூட்டிங் நடந்து கொண்டிருந்து. தமிழில் ஒரு படத்தில் தான் நடித்திருந்தார் அஜித். அப்போதே அஜித் ரொம்ப நல்ல மனிதாராக தெரிந்தார்.
எல்லோருக்கும் உதவும் குணம் அஜித் சாருக்கு அதிகம். அவர் சம்பாதிப்பது எவ்வளவாக இருந்தாலும் அடுத்தவர்களுக்கு கொடுத்து விடுவார். யாருக்கு என்ன உதவி செய்தாலும் வெளியில் காட்டிகொள்ள மாட்டார். யாராவது போலியாக பேசினாலோ புகழ்ந்தாலோ எளிதில் கண்டுபிடித்துவிடுவார். அவர்களை தவிர்த்து விடுவார். ஆனால் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்று யாராவது சொன்னால் உடனே காது கொடுத்து கேட்பார். நான் உதவி இயக்குநராக இருந்த போது பைக்கில்தான் வருவார்.
அப்போது எனக்கு பீர் எல்லாம் வாங்கிக்கொடுப்பார். அஜித் சார் ஜாலியான கேரக்டர். அழகாக இருந்தாலும் ஆரம்பத்தில் நிறைய அவமானங்களை சந்தித்துள்ளார். அவர் மேலும் பல உயரங்களை தொடுவார் என கூறியுள்ளார். இதேபோல் விஜய் குறித்தும் அந்த நேர்காணலில் பேசியுள்ளார் நடிகர் மாரிமுத்து. விஜய் உணர்ச்சிகளை எளிதில் காட்டமாட்டார். ரொம்ப நிதானமாக இருப்பார். விஜய்யின் நிதானம் கலைஞர் கருணாநிதியின் நிதானத்திற்கு ஒப்பானது என புகழ்ந்துள்ளார் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து.