Categories
உலக செய்திகள்

ஜாலியாக சென்ற புதுமண தம்பதியினர்…. நொடியில் நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் சோகம்….!!!!

சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த புதுமணத் தம்பதியினர் சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைவு ஒன்றில் தம்பதியினரை முந்த முயன்ற 2 கார்கள் மோதிக்கொண்டது. இதற்கு இடையில் சிக்கிக் கொண்ட புதுமணத் தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கியெறியப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இந்த துயர சம்பவம் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள Bernina கணவாய்ப் பகுதியில் அரேங்கேறியுள்ளது.

விபத்தில் இறந்தவர்கள் இத்தாலியைச் சேர்ந்த Carlo (52) மற்றும் Carla (57) என தெரியவந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு சென்ற மாதம் தான் திருமணம் நடந்தது. இந்நிலையில் தங்கள் தேனிலவைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில்உள்ள மலைகளில் பயணிக்க விரும்பி அவர்கள் அங்கு வந்தபோது அவர்களுடைய வாழ்வு எதிர்பாராத விதமாக முடிவுக்கு வந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |