ஜார்ஜியாவில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் ஜார்ஜியாவில் ஜோபைடன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் உளவுத்துறை அவருக்கு அதிரடியாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்த வந்த நிலையில் வெற்றி வாகை சூடியுள்ளார். ட்ரம்ப் 214 வாக்குகள் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், நொவோடா மற்றும் கடும் இழுபறியிலுள்ள ஜார்ஜியா மாகாணங்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் ஜோ பைடன் ஜார்ஜியாவில் வெற்றி பெற்றுள்ளார். இதனால் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே அமெரிக்க டெலாவேர் பகுதியில் இருக்கும் பைடனின் வீட்டிற்கும், அவருக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். பொதுவாக ஜனாதிபதியாக பொறுப்பேற்க இருக்கும் நபருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிப்பதோடு மட்டுமல்லாமல், தேர்தல் பிரச்சார காலத்திலும் அவருக்கு உளவுத்துறையின் பாதுகாப்பு அளிக்கப்படும். கடந்த தேர்தல்களில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கபட்ட நபருக்கு தேர்வு முடிவு வெளியான உடனே உயர் ரக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஒருவேளை ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்பதை டொனால்டு ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள மறுத்தால், ஜோ பைடனுக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நிறுத்தப்படும். மேலும் டிசம்பர் மாதம் நடுவில் தேர்தல் சபை கூட்டப்படும் வரை ஜோ பைடன் காத்திருக்க கூடும் என்று உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் ஜோ பைடனுக்கான பாதுகாப்பை உளவுத்துறை கண்காணிப்பதோடு, பாதுகாப்பையும் அதிகரித்துள்ளது.