ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட்டை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹ்சாரிபாக் மாவட்டத்தை சேர்ந்த மாவோயிஸ்ட் அம்மாநில போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், அவர் சென்னையில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினர் சென்னை காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர்.
இதையடுத்து எண்ணூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கூலி தொழிலாளியாக மாவோயிஸ்ட் சுகார் கஞ்சு வேலை பார்த்து வந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எண்ணூர் போலீசார் நேற்று காலை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு மாவோயிஸ்டுகள் யாரேனும் கூலித் தொழிலாளிகள் போல் தமிழகத்துக்குள் பதுக்கி இருக்கலாமென தமிழக கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.