Categories
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில்…. நக்சலைட்டுகளின் வெடிகுண்டு தாக்குதல்… 3 பேர் பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய பயங்கரமான வெடிகுண்டு தாக்குதலால் மூன்று பாதுகாப்பு படையினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேற்கு சிங்பும் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி ஒன்று உள்ளது .அப்பகுதியில் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுப்பதற்காக அதிரடி படை சார்பில் ஜார்க்கண்ட் ஜகுவார், சிஆர்பிஎஃப் வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஏனெனில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் மத்திய பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் அதிகமாக உள்ளதன் காரணமாக வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் தற்பொழுது முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. ஜார்க்கண்ட் ஜகுவார் , மாநில அதிரடிப்படை , சிஆர்பிஎஃப்,   ஆகிய மூன்று படைகளை சேர்ந்த வீரர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த பொழுது நக்சலைட்டுகள் வைத்திருந்த வெடிகுண்டு ஓரிரு இடங்களில் வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் மூன்று பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். அவர்கள் மூவரும் ஜார்கண்ட் ஜாக்குவார் ,சிறப்பு அதிரடி படைகளை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் அவர்கள் சிஆர்பிஎஃப் ,ஜாக்குவார் ஆகிய படைகளை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.

Categories

Tech |