Categories
தேசிய செய்திகள்

“ஜாமீன் எல்லாம் வழங்க முடியாது”… 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கணும்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி அவருடன் சேர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து தேசிய போதைப்பொருள் பிரிவினரின் ஆர்யன் கானிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில நாட்கள் விசாரணை நடத்த வேண்டும் என்று என்சிபி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் இதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை. விசாரணைக்கு போதுமான நாட்கள் கொடுக்கப்பட்டது எனக்கூறி 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஆரியன் கான் சார்பில் ஜாமின் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவையும் இன்று விசாரணை செய்த நீதிமன்றம், ஜாமின் மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. மேலும் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |