Categories
தேசிய செய்திகள்

ஜாதி பெயரை கூறி திட்டிய வழக்கு… குற்றவாளியை விடுதலை செய்த உச்சநீதிமன்றம்..!!!

ஜாதி பெயரை கூறி திட்டியதாக அளிக்கப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்ட வரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த 1994 மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ராமவதார் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பட்டினத்தை சேர்ந்த பிரேம்பாய் என்ற பெண்மணிக்கும் இடையே நில தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராமாவதார் அப்பெண்மணியை ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார். இதையடுத்து அந்தப் பெண்மணி அவர் மீது வழக்கு பதிவு செய்தது. பிறகு அவருக்கு 6 மாத சிறையும் ,1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் ஜபல்பூர் கிளை தள்ளுபடி செய்தது.

பிறகு அவர் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தார். அதில் அவருக்கும் அந்த பெண்மணிக்கும் இடையேயான தகராறு தீர்ந்துவிட்டதாகவும், வழக்கு விசாரணையில் இருந்து விடுபட்டு இருவரும் சுமுக உறவை தொடர்ந்து வருவதாகவும் கூறியிருந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட இழப்பினால் மட்டுமே அவர் ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளார். மேலும் அந்த ஜாதி மீது அவருக்கு  எந்த வெறுப்பும் அல்ல என்று கூறி இந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்து தீர்ப்பளித்தது.

Categories

Tech |