Categories
மாநில செய்திகள்

ஜாதி கலவரம்: தமிழகத்தில் கொண்டுவர இவங்க முயற்சி பண்றாங்க…. அமைச்சர் நேரு பேச்சு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் தி.மு.க-வின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் போன்றோர் தலைமை தாங்கி உரையாற்றினர். இந்நிலையில் பேசிய கே.என் நேரு, திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விவசாய கடன் தள்ளுபடி , கூட்டுறவுக்கடன் தள்ளுபடி என மக்களுக்கான பல திட்டங்களை திறன்பட செய்து வருவதாக குறிப்பிட்டார். அதுமட்டுமல்லால் தி.மு.க ஆட்சிக்கு வந்தஉடனே கொரோனா பெரும் தொற்றை சமாளிக்க வேண்டிய பெரும் சவால் முன் வைக்கப்பட்டது.

அதனை முதல்வர் மு.க ஸ்டாலின் துணிச்சலோடும், தெளிவான வழிகாட்டுதலோடும் செய்து முடித்தார் என்று தெரிவித்தார். எனினும் தமிழ்நாடு பாஜகவினர் தி.மு.க பற்றியும், முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பும் அடிப்படையில் பேசி வருவதாக விமர்சித்த கே.என் நெரு, திமுக ஆட்சி மக்களுக்கான நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அத்துடன் தமிழகத்தில் சாதி கலவரத்தை உருவாக்கி தி.மு.க.வின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்” என்றும் அவர் விமர்சித்தார். இந்த கூட்டத்தில் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Categories

Tech |