Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள்…. ரத்து செய்து முதலமைச்சர் அதிரடி…!!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்த அரசாணையை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக வழக்குகள் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் பேரவையில் அறிவித்திருந்தார். காவலர்களை தாக்கியது, தீவைப்பு போன்ற ஒரு சில விளக்கங்களை தவிர மற்ற அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். வல்லுநர்களின் ஆலோசனை பெற்று வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. வழக்குகள் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |