Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி…. நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்….!!

ஜல்லிக்கட்டு போட்டியை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளின்படி போட்டியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி-14 , பாலமேட்டில் ஜனவரி-15, அலங்காநல்லூரில் ஜனவரி-16ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் காவல் துறையின் பேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |