மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,999 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டில் 4,534 காளைகள் பங்கேற்க அவற்றின் உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக அறிவித்துள்ள நிர்வாகம், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் மற்றும் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் தலா 700 காளைகள், 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற நிலையில் ஏராளமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.. மதுரையில் வரும் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.