ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது இந்திய எல்லையில் அத்துமீறிய தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.
பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கின்ற மான் கோட் செக்டார் பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியும்,சிறிய ரக கையெறி குண்டுகள் வீசியும் தாக்குதல் நடத்தினர்.பாகிஸ்தான் ராணுவத்தினரின் கொடூர தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக பாதுகாப்புத்துறை அதிகாரி கூறியுள்ளார்.